தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் விபத்து: ஒப்பந்தத் தொழிலாளர் 4 பேர் மயக்கம்
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூச்சுத்திணறல் காரணமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் 4 பேர் மயக்கமடைந்தனர்.


தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூச்சுத்திணறல் காரணமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் 4 பேர் மயக்கமடைந்தனர்.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3வது யூனிட்டில் பாய்லருக்கு நிலக்கரி கொண்டு செல்லும் இயந்திரத்தில் சில நாட்களுக்கு முன் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கு இளநிலைப் பொறியாளர் மரிய அந்தோணி (45) தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, பழுது நீக்கும் பணி நடைபெற்றது. கொல்லம் பரம்புவைச் சேர்ந்த ஜெயதுரை என்பவரின் மகன் ஆனந்தகுமார் (24), பிச்சையா என்பவரின் மகன் முத்துராஜ்(25), ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த இருதயம் என்பவர் மகன் விஜயகுமார்(22) என ஒப்பந்தத் தொழிலாளர்க ள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிலக்கரி கொண்டு செல்லும் இயந்திரத்தின் மூடி திடீரெனக் கழன்று விழுந்ததில், அதில் இருந்து சாம்பல்வெளியே கொட்டியுள்ளது. இதில் ஏற்பட்ட புகையால் 4 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை அடுத்து 4 பேரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...