பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லையில் ஆயுதங்களுடன் உலா வந்த சொகுசு கார் பறிமுதல்

பாளையங்கோட்டையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, போலியான நம்பர் பிளைட், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் உலா வந்த சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :3 டிசம்பர் 2013, 10:23 am

ஷேக் அப்துல்காதர்

பாளையங்கோட்டையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, போலியான நம்பர் பிளைட், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் உலா வந்த சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஓய்வுபெற்ற அரசு டாக்டர் அருள், அவரது மனைவி ஜான்சிராணி ஆகியோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். பாளையங்கோட்டை, பெருமாள்புரம் பகுதியில் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை உடைத்து நகை, பணம் திருட்டு போன்ற பல்வேறு குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

இதை தொடர்ந்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே திங்கள்கிழமை இரவு பாளையங்கோட்டையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் இனோவா சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.காரில் போலியான எண்களுடன் 50 நம்பர் பிளைட்டுகள், அரிவாள், கடற்பாறை, கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் காரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். போலீஸார் காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.