பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

டிச. 28 ல் மு.க. ஸ்டாலின் நெல்லை வருகை

வரும் டிச. 27 ம் தேதி (வெள்ளிக்கிழமை) நாகர்கோவிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருநெல்வேலி மாவட்டம் வருகை தரும் கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கு காவல்கிணற்றில்

News image
Updated On :7 டிசம்பர் 2013, 1:01 pm

ஷேக் அப்துல்காதர்

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வரும் டிச. 28 ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

திருநெல்வேலி மாவட்ட திமுக செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் சனிக்கிழமை அளித்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது:

வரும் டிச. 27 ம் தேதி (வெள்ளிக்கிழமை) நாகர்கோவிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருநெல்வேலி மாவட்டம் வருகை தரும் கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கு காவல்கிணற்றில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.குற்றாலத்தில் தங்கும் அவர் மாலையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி, மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுகிறார்.

28 ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு குற்றாலம் காசிமேஜர்புரத்தில் உள்ள ஸ்ரீமுருகன் திருமண மண்டபத்தில் இம்மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் 270 பேரை சந்தித்து அவர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.அன்றைய தினம் இரவு 7 மணி அளவில் கடையநல்லூரில் நடைபெறும் தலைவர் கருணாநிதியின் 90 ஆவது பிறந்த தின விழா, கட்சி பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிகிறார்.

ஸ்டாலின் வருகை குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் டிச. 10 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ஆர்யாஸ் அபிநயா அரங்கில் வைத்து மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ. க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.அன்றைய தினம் மாலை 4 மணிக்கு வண்ணார்பேட்டை சகுந்தலா ரமா அரங்கில் வைத்து மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கின்றனர் என்றார் அவர்.

பேட்டியின்போது, கட்சியின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.எஸ். ஜார்ஜ்கோசல், மாநகர மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.வி. சுரேஷ் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.