

சிதம்பரத்தில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலைக்கு பக்தர்களுக்கு முதலுதவிக்காக மருந்து, மாத்திரைகள் கொண்ட 15 பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிதம்பரம், அண்ணாமலைநகர் ஐயப்ப சேவா சங்க கிளைகள் சார்பில் பொன்மணி அரங்கில் விநாயகர்பூஜை மற்றும் மகளிர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் சபரிமலைக்கு பக்தர்களுக்கு வழங்க ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகளை கடலூர் மாவட்டச் செயலாளர் பி.சுவாமிநாதனிடம் சிதம்பரம், அண்ணாமலைநகர் கிளை நிர்வாகிகள் சங்கர், கணேசன், சிவக்குமார் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் யாகமூர்த்தி முன்னிலை வகித்தார். மேலும் முதியோர்களுக்கான ஆர்த்தோ நாற்காலியும், ஆஸ்துமா நோயாளிகளுக்கு நெபுலைசர் மிஷனும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.