பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரூ. 4 லட்சம் நகை, பணம் திருட்டு: கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் தனியார் ஓடு தொழிற்சாலை பணியாளர் வீட்டில் ரொக்கப் பணம் ரூ. 1 லட்சம், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை திருடிய பொறியியல் மாணவர், அவரது தாயார் மற்றும் 2 பெண்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :8 டிசம்பர் 2013, 4:18 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் தனியார் ஓடு தொழிற்சாலை பணியாளர் வீட்டில் ரொக்கப் பணம் ரூ. 1 லட்சம், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை திருடிய பொறியியல் மாணவர், அவரது தாயார் மற்றும் 2 பெண்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பணகுடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் சங்கர்குமார் (40). தனியார் ஓடு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணி செய்து வருகிறார். அவர் வசிக்கும் இதே காம்பவுன்டில் வசிப்பவர் காளிதாஸ் மகன் பாஸ்கர் (20). தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தாயார் ராமலட்சுமி (40). ம் ராஜலிங்கம் மனைவி பேச்சியம்மாள் (42). கூலித் தொழிலாளி. மற்றும் இதே காம்பவுண்டில் வசிக்கும் ராமர் மனைவி முத்து (40).

வெள்ளிக்கிழமை இரவு சங்கர்குமார், தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றாராம். வீட்டுக்கு பூட்டு எதுவும் போடாமல் சாதாரணமாக பூட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஸ்கர், அவரது தாயார் உள்ளிட்டோர் சங்கர்குமார் வீட்டை திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம், 9 பவுன் எடையுள்ள ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை திருடினராம்.

பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டதை அறிந்த சங்கர்குமார், பணகுடி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் பாஸ்கர், அவரது தாயார் ராமலட்சுமி, பேச்சியம்மாள், முத்து ஆகியோர் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து கல்லூரி மாணவர், மற்றும் 3 பெண்களையும் போலீஸார் சனிக்கிழமை மாலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.