பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தாமிரவருணி பாசனத்தில் 45,000 ஹெக்டேரில் நெல் நடவு

தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 45,000 ஹெக்டேரில் நெல் நடவு பணி முடிவடைந்துள்ளது. மழை கிடைத்தால் மேலும் 15,000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது என

News image
Updated On :9 டிசம்பர் 2013, 9:22 am

ஷேக் அப்துல்காதர்

தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 45,000 ஹெக்டேரில் நெல் நடவு பணி முடிவடைந்துள்ளது. மழை கிடைத்தால் மேலும் 15,000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது என வேளாண் இணை இயக்குநர் கி. செளந்திரராஜன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடி தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு்ள்ளது.

திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் கி. செளந்திரராஜன் கூறியதாவது: பாபநாசம் அணையின் மூலம் பாசனம் பெற்று வரும் வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய் பாசனப் பகுதியில் விவசாயிகள் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கு 80 சதவிகிதம் நடவு முடிந்துள்ளது.

திருநெல்வேலி கால்வாய், பாளையம் கால்வாய் பாசனப் பகுதியில் விவசாயிகள் ஆரம்ப கட்ட பணியை மேற்கொண்டுள்ளனர். இம்மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. மழை இல்லாததால் சங்கரன்கோவில், ராதாபுரம் வட்டங்களில் நெல் சாகுபடி பணியில் தேக்கம் ஏற்பட்டு்ள்ளது.இப்பகுதியில் மானாவாரி பயிர்களான உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப் பயிறு 17,800 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு்ள்ளது. மக்கா சோளம் 11,500 ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழல் மானாவாரி பயிர்களுக்கு ஏற்றதாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால்தான் நெல் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது என்றார் அவர்.

பருவ மழை:

வடகிழக்குப் பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய போதிலும், தொடர்ந்து நீடிக்காமல் விட்டு விட்டு பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக கிடைக்காத நிலை உள்ளது. மழை பரவலாக பெய்த போதிலும், 28 சதவிகிதம் குறைவாக பெய்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

 மழை குறைந்ததால் அணைகளின் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. தாமிரவருணி பாசனத்தை செழிக்கச் செய்யும் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டமும் குறைந்து காணப்படுகிறது.

குறைந்த நீர்வரத்து:

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 622.71 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 224 கனஅடியும், கடனாநதி அணைக்கு 13.16 கனஅடியும், ராமநதி அணைக்கு 29.48 கனஅடியும், கருப்பாநதி, அடவிநயினார் அணைகளுக்கு தலா 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. நீர்வரத்து குறைந்து காணப்படுவதால் அணைகளின் நீர்மட்டம் இறங்கு முகத்தில் உள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 101.15 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 110.40 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 74.76 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 71.20 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 62.00 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 61.09 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 105.00 அடியாகவும் இருந்தது.

பாசனத்திற்கு பாபநாசம் அணையில் இருந்து 1003.50 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 35 கனஅடியும், கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து தலா 45 கனஅடியும், கருப்பாநதி அணையில் இருந்து 25 கனஅடியும், அடவிநயினார் அணையில் இருந்து 68 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.