பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு: மாநில ஜமாத்துல் உலமா சபை கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டத் தலைவர் டி.ஜெ.எம். ஸலாஹூதீன், மாவட்டச் செயலர் எம்.எச். ஷம்சுத்தீன், மாவட்டப் பொருளாளர் ஏ.ஒய். முகைதீன், அம்பாசமுத்திரம் வட்டார கெளரவத் தலைவர் எம். பீர்முகம்மது

News image
Updated On :10 டிசம்பர் 2013, 2:01 pm

ஷேக் அப்துல்காதர்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மாநில ஜமாத்துல் உலமா சபை செயற்குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது.

அம்பாசமுத்திரத்தில் முகைதீன் கீழபள்ளிவாசலில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.இ.எம். அப்துல்ரகுமான் தலைமை வகித்தார்.

திருநெல்வேலி மாவட்டத் தலைவர் டி.ஜெ.எம். ஸலாஹூதீன், மாவட்டச் செயலர் எம்.எச். ஷம்சுத்தீன், மாவட்டப் பொருளாளர் ஏ.ஒய். முகைதீன், அம்பாசமுத்திரம் வட்டார கெளரவத் தலைவர் எம். பீர்முகம்மது முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கலிலூர்ரஹ்மான், அபுதாஹீர், கோவை மாவட்ட நிர்வாகி சுல்தான், கவிஞர் தேங்கை ஷரிபுதீன், சென்னை மாவட்ட நிர்வாகி இல்யாஸ், திருச்சி மாவட்ட நிர்வாகி முகம்மதுமீரான், மேலப்பாளையம் அரபிக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ். ஹைதர்அலி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அரசு கஸ்சாலி, மேலப்பாளையம் பி.ஏ. காஜாமுகைதீன், புளியங்குடி ஜெ. கலீல்ரஹ்மான், தி. மீராசாஆலிம், பி. அப்துல்ரஹீம் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அமைப்பின் மாநில பொதுச்செயலர் எம்.ஓ. அப்துல்காதிர்தாவூதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அம்பாசமுத்திரம் வட்டாரத் தலைவர் பி. ஷேக்மன்சூர் வரவேற்றார். வட்டாரச் செயலர் எம். முகம்மதுஇஸ்மாயில் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.