தமிழாசிரியர்கள் தமிழ்பற்றாளர்களாக இருக்க வேண்டும்: தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன்
தமிழாசிரியர்கள் தமிழ் பற்றாளர்களாக இருக்க வேண்டும். மாணவர்களிடம் தமிழ்ப் பற்றை வளர்க்க வேண்டும் என தொல்காப்பிய இலக்கண கோட்பாடு வளர்ச்சிப் பயிலரங்கில் தமிழறிஞர் ச.வே.


தமிழாசிரியர்கள் தமிழ் பற்றாளர்களாக இருக்க வேண்டும். மாணவர்களிடம் தமிழ்ப் பற்றை வளர்க்க வேண்டும் என தொல்காப்பிய இலக்கண கோட்பாடு வளர்ச்சிப் பயிலரங்கில் தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை ஆகியன சார்பில் தொல்காப்பிய எழுத்துச் சொல் இலக்கணக் கோட்பாடு வளர்ச்சிப் பயிலரங்கம், ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் 10 தினங்கள் நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை தொடங்கிய இப்பயிலரங்கில், பயிலரங்கம் அறிமுகம், தமிழ் இலக்கணங்கள் அறிமுகம் என்ற தலைப்பில் தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தொல்காப்பியம் மிகப்பழமையான இலக்கண நூல். தொல்காப்பியம் 113 ஏடுகளை கொண்டது. உலகம் முழுவதும் சென்று நூல்களை படித்துள்ளேன். முதல் முறையாக 1847 ம் ஆண்டு தொல்காப்பியம் அச்சிடப்பட்டது. தொல்காப்பியம் தமிழ் ஆற்றலை வளர்க்கும்.
ஆசிரியர்கள் அனைவரும் வித்வான்கள்தான். தமிழாசிரியர்கள் தமிழ் பற்றாளர்களாக இருக்க வேண்டும். அறிவாற்றலை வளர்க்க நூல்களை படிக்க வேண்டும். தமிழ் இலக்கணப் புத்தகங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்மொழி மீதான பற்றை, ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும். மாணவர்களிடம் தமிழ்ப் பற்றை வளர்க்க வேண்டும். தொல்காப்பிய இலக்கணம் குறித்த நூல் வரும் டிச. 27, 28 ம் தேதிகளில் தமிழூரில் நடைபெறும் கருத்தரங்கில் வெளியிட உள்ளேன் என்றார் அவர்.
முன்னதாக பயிலரங்க தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சி. விஜயாம்பிகா தலைமை வகித்து பேசினார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தமிழியல்துறை பேராசிரியர் முனைவர் சு. அழகேசன் சிறப்புரை ஆற்றினார். ராணி அண்ணா கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர் ஜெ. வைலட்டெல்பின் ஜெயகுமாரி வாழ்த்தி பேசினார்.
பயிலரங்கில் கோவை பாரதியார் பல்கலைக் கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து பி.எச்.டி., எம்.பில் ஆய்வு மாணவர்கள் 40 பேர் பங்கேற்றனர். பயிலரங்க நெறியாளர் இரா.ச. சுகிர்தாபஸ்மத் வரவேற்றார். முனைவர் இரா. சின்னத்தாய் நன்றி கூறினார்.
தொடர்ந்து டிச. 19 ம் தேதி வரை நடைபெறும் இப்பயிலரங்கில் உயிரெழுத்துக்கள், வேற்றுமைப்புணர்ச்சி, எழுத்துக்களின் வருகைமுறை, வேற்றுமைகள், சமூக உருவாக்க பின்புலத்தில் இலக்கணம், ஒப்பிலக்கண ஆய்வு, திணைப்பால் பாகுபாடு, எழுத்துக்களின் வரவடிவம்,
உரிச்சொல் விளக்கம், குறிப்பு வினை, சொல் வகைகள், எதிர்மறை அமைப்பாய்வு, ஆகுபெயர், எழுத்துக்களின் பிறப்பு உள்ளிட்ட தலைப்புகளில் பேராசிரியர்கள் பேசுகின்றனர். டிச. 19 ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு பயிலரங்க நிறைவு விழா நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...