பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் 14 புலிகள்

களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் கடந்த 2012 ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 12 புலிகளும், 40 சிறுத்தைகளும் இருந்தது. தற்போது மேற்கொண்ட கணக்கெடுப்பில் கிடைத்த தகவலின்படி கடந்த

News image
Updated On :22 டிசம்பர் 2013, 11:56 am

ஷேக் அப்துல்காதர்

களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் கடந்த 2012 ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 12 புலிகளும், 40 சிறுத்தைகளும் இருந்தது. தற்போது மேற்கொண்ட கணக்கெடுப்பில் கிடைத்த தகவலின்படி கடந்த ஆண்டை விட 2 புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள், சிறுத்தை உள்ளிட்ட விலங்கினங்கள் கணக்கெடுக்கும் பணி டிச. 16 ம் தேதி தொடங்கியது. காப்பகத்தில் 45 பீட்டுகளுக்கு தலா 5 பேர் கொண்ட குழுக்களாக சென்று விலங்கினங்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வனவர், வனக்காப்பாளர், வேட்டைத் தடுப்புக் காவலர், தன்னார்வத் தொண்டர், விலங்கியல் பயிலும் கல்லூரி மாணவர் என 5 பேர் கொண்டு குழுவினர் தினசரி 5 கி.மீ சுற்றளழில் வனப்பகுதியில் நடந்து சென்று விலங்கினங்களின் கால்தடங்கள், எச்சம் ஆகியவற்றை பதிவு செய்தனர்.கணக்கெடுப்பில் திருநெல்வேலி இந்து கல்லூரி மாணவர்கள் 20 பேரும், பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி மாணவிகள் 10 பேரும் பங்கேற்றனர். களப்பணியாளர்கள் 5 தினங்கள் வனப்பகுதிகளில் சேகரித்த தகவல்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். திங்கள்கிழமை இப்பணி முடிவடைகிறது.

புலிகள் காப்பகத்தில் 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு புலிகளின் எண்ணிக்கை குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இதனிடையே கடந்த 2012 ம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் 12 புலிகளும், 40 சிறுத்தைகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டு்ள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலிகள் கணக்கெடுப்பின்போது, முண்டன்துறை சரகத்தில் களப்பணியாளர்கள் புலி ஒன்றின் கால்தடத்தை கண்டறிந்து சேகரித்தனர். அங்கு பதிவு செய்யப்பட்ட கால்தடம், பதிவு செய்வதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் அப்பகுதியை புலி கடந்திருப்பது தெரியவந்தது. தற்போது மேற்கொண்ட கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி கடந்த ஆண்டை விட ஒன்று அல்லது 2 புலிகளின் எண்ணிக்கை  அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.