கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள், கொரியா சூங்சிங் பல்கலைக்கழகத்தில் பி.டெக். ஒராண்டு சென்று படிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டுதோறும் ஒரு செமஸ்டர் அல்லது ஓராண்டு கொரியா சென்று மாணவர்கள் தங்கள் படிப்பை அதே துறையில் தொடரலாம். இறுதியாண்டு இங்கு வந்து படிப்பார்கள். இந்த ஆண்டு இ.சி.இ. மூன்றாம் ஆண்டு மாணவர் ரவிச்சந்திர திவாகர், சிவல் துறை மாணவர்கள் ஜி.எ.அகில் அண்ணாமலை, எஸ்.சித்தையா ஆகியோர் எவ்வித கட்டணமும் இன்றி கொரியா சென்று படிப்பதற்கான உத்தரவை வேந்தர் க.ஸ்ரீதரன் வழங்கி மாணவர்களை பாராட்டினார்.