ஆரம்பாக்கத்தில் 1 டன் செம்மரத் துண்டுகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் கணபதி நகரில் ஒரு வீட்டில் இருந்து டாடா மேஜிக் வாகனம் மூலம் செம்மரத் துண்டுகள் கடத்தப்பட உள்ளது குறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர்


கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் டாடா மேஜிக் வாகனம் மூலம் கடத்த இருந்த 1 டன் செம்மரத் துண்டுகளை ஆரம்பாக்கம் போலீஸôர் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் கணபதி நகரில் ஒரு வீட்டில் இருந்து டாடா மேஜிக் வாகனம் மூலம் செம்மரத் துண்டுகள் கடத்தப்பட உள்ளது குறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருள்நாதன், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர்.
அங்கு டாடா மேஜிக் வாகனத்தில் 30 செம்மரத்துண்டுகள் அடுக்கப்பட்டு சென்னைக்கு கடத்த தயாராக இருந்த நிலையில் போலீஸார் அந்த வாகனத்தை தடுத்து அங்கிருந்த இருவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர்கள் சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த புதுமான்கனி மகன் நாகூர் மீரான்(35) என்பவர் செம்மரங்களை வாங்க அங்கு வந்ததும், அவருக்கு செம்மரம் வாங்க உதவியாய் இருந்த ஆரம்பாக்கம் அடுத்த ஆந்திர மாநிலம் காரூர் பகுதியை சேர்ந்த துலுக்காணம் மகன் சுதாகர்(29) என்பதும் தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய டாடா மேஜிக் வாகன உரிமையாளரான ஆரம்பாக்கம் கணபதி நகரை சேர்ந்த முஜிபூர் என்பரை போலீஸார் தேடு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1 லட்சம் மதிப்பிலான செம்மரத்துண்டு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை ஆரம்பாக்கம் போலீஸார் மாதர்பாக்கத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...