வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் சங்கரன்பந்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது:
வரும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம்பெறுவது எனபது குறித்து ஜனவரி 10 ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும்.குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பு இல்லை என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது நியாமானது அல்ல.இது குறித்து தொடர்புடையவர்கள் மேல்முறையீடு செய்ய உள்ளார்கள்.நரேந்திர மோடிக்கு இது ஒரு தாற்காலிக நிவாரணம் அவ்வளவுதான்.தமிழகத்தில் கரும்புக்கான விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் என அரசு நிர்ணயிக்க வேண்டும்.தமிழகத்தில் பரவலாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளை முறையாக சேர்க்காமல் அதிகாரிகள் தவறிழைத்துள்ளனர்.இதனால் ஏராளமான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யமுடியவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு தீர்வு காணவேண்டும்.
இந்திய துணைத்தூதர் அமெரிக்க அரசால் நடத்தப்பட்ட விதத்திற்கு இந்திய அரசு முதுகெலும்புடன் காட்டிய எதிர் வினை போன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது படகுகள் சிறைப்பிடிக்கப்படுவது போன்ற செயலுக்காக இலங்கையிடம் எதிர்வினை காட்டுவதில்லை.ராஜதந்திர யுத்திகளுடன் இலங்கை மீது கடுமையான அழுத்தங்களை தரக்கூடிய வகையில் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
டிசம்பரில் இரு நட்டு மீனவர்களும் கூட்டாக பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என மத்திய மாநில அரசுகள் கூறியிருந்தன ஆனால் இதுவரையில் நடைபெறவில்லை.தமிழகத்தில் மின் மேலாண்மை அவசியம்.அதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் மின்சார பற்றாக்குறை தீர்க்கப்படவில்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க அனுமதிக்கக் கூடாது என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.அதையும் மீறி மீத்தேன் வாயு எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மனிதநேய மக்கள் கட்சி களத்தில் இறங்கி போராடும்.வரும் மக்களவை தேர்தலில் மோடி அலை வீசுகிறது என்பது ஒரு மாயை.தமிழகத்தை பொருத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.அதே போன்ற நிலைதான் வரும் மக்களவை தேர்தலில் ஏற்படும்.தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
பேட்டியின்போது கட்சியின் மாநில பொதுச் செயலர் தமீமுல் அன்சாரி,மாணவரணி செயலர் ஷரத்,நாகை மாவட்ட செயலர் முசாகுதீன்,தமுமுக மாவட்ட செயலர் முஜ்புதீன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

