வீட்டில் ஒன்று அல்லது இரு குழந்தைகளை வைத்துள்ளார்கள். சனி, ஞாயிறு விடுமுறை என்றால் பிள்ளைகளை வைத்து பெற்றோரால் சமாளிக்க முடியுமா? ஏன் பள்ளிக்கு விடுமுறை விடுகிறார்கள் என்கிறார்கள். பல்வேறு சூழ்நிலையில் வளர்க்கப்பட்டுள்ள, வெவ்வேறு குணநலன் கொண்ட பிள்ளைகளை வைத்து ஆசிரியர்கள் பள்ளியில் கற்றுக் கொடுக்கிறார்கள். அவர்கள் சிறந்த குடிமக்களாக உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள், சில கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்தால்தான் பள்ளி நிர்வாகம் நடைபெற இயலும். பத்திரிக்கைகளில் இதுபோன்ற செய்திகள் வரும்போது அதனை புறக்கணித்துவிடுங்கள்.இளம் கன்று பயம் அறியாது என்பார்கள். மாணவர்களை நல் வழிப்படுத்த கண்டிப்பு அவசியம் தேவை.உங்கள் பிள்ளைகள் எந்த பாடத்தில் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் விருப்பப்படி பொறியியல், மருத்துவம் எடுத்து படிக்க வையுங்கள். உங்கள் எண்ணங்களை, விருப்பங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். பெற்றோர் மாணவர்களை அடுத்த மாணவர்களுடன் ஒப்பிட்டு குறை கூறாமல், ஊக்குவிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை என்றும் வெற்றிகரமாகத்தான் இருக்கும். கடின உழைப்பு இருந்தால் மாணவர்கள் நாளை சரித்திரம் படைக்கலாம் என்று கூறினார்.