அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெண்ணை ஏமாற்றி 4-வது திருமணம் செய்ய முயன்றவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில், இளம் பெண்ணை ஏமாற்றி 4-வது திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :2 பிப்ரவரி 2013, 3:40 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில், இளம் பெண்ணை ஏமாற்றி 4-வது திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது மைதீன் மனைவி பீமா பீவி (42). இவரது மகள் ஹபிபா பானுவை, சாட்சியாபுரம், ஆசாரி காலனியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் நாசர் அலி (27) என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க 27.5.12-ம் தேதி நிச்சயம் நடைபெற்றுள்ளது. அப்போது ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகை வரதட்சிணையாக கொடுப்பது என்று பேசி முடித்துள்ளார்கள். முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார்கள். சில நாட்கள் கழித்து நாசர் அலி குடும்பத்தார் மீதி பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில் நாசர் அலி குறித்து, மணமகள் வீட்டார் விசாரித்துள்ளார்கள். அதில் ஏற்கனவே நாசர் அலி 3 திருமணம் செய்தவர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து திருமணத்தை நிறுதிவிட்டார்கள். 17.1.13-ம் தேதி, வரதட்சிணையாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது, ஆபாசமாக பேசி மிரட்டினார்களாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்களை ஏமாற்றி, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனுவை பீமா பீவி அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நாசர் அலி, அவரது தாயார் பாத்மாவதி (எ) ஆயிஷா பீவி (52) ஆகியோர் கைது செய்தனர். எஸ்.முகமது இஸ்மாயிலை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.