இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சி.கே.மங்களம் அருகே இருப்பது ஓரிக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் அருள்சாமி மகன் ஆரோக்கிய இளங்கோ(42). இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் தோல்பைகள் தயாரிக்கு நிறுவனம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் காரைக்குடி வந்து அங்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும் அங்கும் அதே தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இவருக்கும் அவருடைய மனைவிக்கும் கருத்துவேறுபாடு இருந்ததாகவும் தெரிகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.