ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம், செக்கடி தெருவைச் சேர்ந்தவர் சி.குருசாமி (30). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி முத்துலட்சுமி (29). குருசாமி அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போடுவாராம். வெள்ளிக்கிழமை மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதில் கணவன்-மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் வெறுப்புற்ற குருசாமி தனக்குத்தானே மண்ணென்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.