அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணியிடம் வழங்காத நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நிரந்தர இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ரூ.2 லட்சம்

News image
Updated On :7 பிப்ரவரி 2013, 1:07 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நிரந்தர இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பள்ளி நிர்வாகிகளைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூரில் காமராஜர் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கே சிவகாசி கிழக்கு, நாரணாபுரம் ரோட்டைச் சேர்ந்த அண்ணாமலை மனைவி சித்ரகலா (25) என்பவர் தற்காலிக இடைநிலை ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். இப்பள்ளியில் ஏற்படும் நிரந்த இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் சித்ரகலாவை நியமிப்பதாக உறுதியளித்து 11.7.09-ம் தேதி கருப்பசாமி (50), பள்ளிச் செயலாளர் எஸ்.ஆர்.தங்கராஜ் (45), முன்னாள் செயலாளர் வைரமுத்து (45), முன்னாள் நிர்வாகி மாரியப்பன் (70) ஆகியோர் ரூ.2 லட்சம் பெற்றார்களாம். இது நாள் வரை பணி நிரந்தரம் செய்யாமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் மோசடி செய்துவிட்டதாக சித்ரகலா கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் கருப்பசாமி, செயலாளர் எஸ்.ஆர்.தங்கராஜ், முன்னாள் செயலாளர் வைரமுத்து, முன்னாள் நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.