டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுமானால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கும்: அமைச்சர் பி.வி.ரமணா எச்சரிக்கை

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் குறுக்கு வழிகளை உபயோகித்து தி.மு.க வெற்றி பெறுமானால் தமிழகத்தின் வளர்ச்சியை

News image
Updated On :8 பிப்ரவரி 2013, 6:41 am

பா.ஜான்பிரான்சிஸ்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் குறுக்கு வழிகளை உபயோகித்து தி.மு.க வெற்றி பெறுமானால் தமிழகத்தின் வளர்ச்சியை பெருமளவில் பாதிக்கும் வகையில் தி.மு.க மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும் என்பதால் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற எச்சரிக்கையுடன் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக வணிக வரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் பி.வி.ரமணா பேசினார்.

தொடர்ந்து அவர் பேசும் போது அ.தி.மு.க-வில் பதவி என்பது உண்மையாக உழைக்கும் சாதாரண கிளை செயலாளரையும் தேடி வரும் என்றும், தி.மு.க-வில் அதன் தலைவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவு பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி கிடைப்பதாக உள்ளது என்று கூறியதோடு வருகின்ற பிப்ரவரி-24ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒவ்வொரு அ.தி.மு.க கிளை கழகத்தினரும் அவர்களது குடும்ப விழாவாக கொண்டாடும் வகையில் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் பிரார்த்தனை செய்வதோடு ஏழைகளுக்கு இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்றார்.

மேலும் அவர் பேசும் போது அ.தி.மு.க கிளை கழகத்தினர் கட்சியின் தூண்களாக உள்ள நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கிளை கழகத்தினர் தீவிரமாக செயல்பட்டு, அந்தந்த கிராமப்பகுதிகளில் உள்ள மக்கள் பிர்ச்சனைகளை ஒன்றிய குழு தலைவரிடமோ, ஒன்றிய செயலாளரிடமோ, அல்லது அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடமோ, நாடாளுமன்ற உறுப்பினரிடமோ அல்லது அமைச்சரிடமோ தெரிவித்தால் உரிய நிதி ஆதாரங்களை கொண்டு மக்களின் குறைகளை தீர்த்து வைத்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க பெரும் வெற்றியை பெற வழிசெய்ய வேண்டும் என்றும் அப்படி வெற்றி பெறும் போது அடுத்த மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க முக்கிய பங்கு வகித்து அதன் மூலம் தமிழகத்தின் அனைத்து வளர்ச்சி பணிகளும் தடையில்லாமல் நிறைவேற்றப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.