அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவிலி. அருகே ஒருரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்

News image
Updated On :10 பிப்ரவரி 2013, 6:16 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பெரியசாமியை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேலக்கோட்டையூர், மேலத்தெரு, பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியத் தேவர் மகன் மாரிமுத்து (29). இவர் சனிக்கிழமை இரவு தனது கணினி கடையை அடைத்துவிட்டு, தனது தந்தையின் கடை முன்பு நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு மேலக்கோட்டையூர், பெருமாள் மகன் பெரியசாமி என்பவர் வந்துள்ளார். இவர் தி.மு.க. ஆட்சியின் போது மாவட்டக் கவுன்சிலராக இருந்தவர். மாரிமுத்துவை வழிமறித்த பெரியசாமி, ஆபாசமாகப் பேசியுள்ளார். இந்த ஊரை போலீஸுக்கு காட்டிக் கொடுப்பவன் நீதான். உன்னையும், உன் சமுதாயத்தையும் நானும் என் பின்னால் இருப்பவர்களும் அழிக்காமல் விடமாட்டோம் என்று கூறி பயங்கரமாய் அடித்தாராம். அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டுள்ளார்கள். என்றைக்கு இருந்தாலும் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறி பெரியசாமி மிரட்டியும் சென்றாராம்.

இது குறித்து மாரிமுத்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பெரியசாமியை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.