அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸார் மீது தாக்குதல்: 9 பெண்கள் உள்ளிட்ட 45 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு அருகே ஒரு பிரச்னை தொடர்பாக

News image
Updated On :10 பிப்ரவரி 2013, 12:28 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு அருகே ஒரு பிரச்னை தொடர்பாக கிராமத்திற்குள் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீஸாரை திட்டமிட்டு அப் பகுதியினர் கல், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கி, போலீஸ் ஜூப்பை உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை 9 பெண்கள் உள்ளிட்ட 45 பேரை கைது செய்தனர்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கோட்டையூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மண் மற்றும் மணல் திருட்டுத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கருப்பசாமி பாண்டியனின் நடவடிக்கையால் மணல் திருட்டுத் தொழில் பாதிக்கப்பட்டிருந்துள்ளது. இவருக்கு உறுதுணையாக இருக்கும் காவல் ஆய்வாளர் ஏ.டி.சக்கரவத்தியும் இருந்துள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு காவல் சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியனுக்கு கோட்டையூர் ஊராட்சி தலைவர் முருகன் செல்போனில் தொடர்பு கோட்டையூரில் சின்ன கருப்பன் மகன் ஆசைத்தம்பி என்பவர் வீட்டில் முறைகேடாக மதுபான பாட்டில்கள் சில்லறை விற்பனை நடைபெற்றுவருதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டின் ஒரு காவலருடன் கோட்டையூர் சென்று குறிப்பிட்ட வீட்டில் சோதனையிட்டுள்ளார். அங்கு மதுபான பாட்டில்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதனையடுத்து போலீஸார் வெளியே வந்துள்ளனர். அப்போது ஆசைத்தம்பி மற்றும் அவரது மனைவி பூமலர் ஆகியோர் எங்கள் வீட்டில் மதுபான பாட்டில் விற்பனை நடைபெறுவதாய் யார் கூறினார்கள்? என்று கேட்டுள்ளனர். அதற்கு போலீஸார் உங்கள் ஊர் தலைவரைப் போய் கேளுங்கள் என்று கூறிவிட்டு காவல் நிலையம் சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஆசைத்தம்பியின் உறவினர்கள் ஏராளமானோர், கோட்டையூர் ஊராட்சி தலைவர் முருகன் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளனர். அவர் போன் மூலம் தகவல் சொன்னதை மறுத்துள்ளார். அப்படியானல் சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியை ஊருக்கு நேரில் வரச்சொல்லி, நீங்கள் சொல்லவில்லை என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் ஊரில் குடியிருக்க முடியாது என்று கூறி மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து முருகன் உடனடியாக வத்திராயிருப்பு காவல் நிலையம் சென்று நடந்ததைக் கூறியுள்ளார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஏ.டி.சக்கரவர்த்தி, சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன், சிறப்பு சார்பு ஆய்வாளர் விநாயகமூர்த்தி, காவலர் சீனிவாசன் ஆகியோர் போலீஸ் ஜூப்பில் கோட்டையூர் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே திட்டமிட்டு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கற்கள், கம்புகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திரண்டிருந்துள்ளர். போலீஸ் ஜூப் போய் கோட்டையூர் மந்தை அருகே நின்றுவுடன் மின்சாரம் தடைபட்டுள்ளது. ஜூப்பில் இருந்து இறங்கிய ஆய்வாளர் சக்கரவத்தியிடம், மண், மணல் அள்ளி தொழில் செய்ய முடியபடி கடுமையான நடவடிக்கை எடுக்கும் உங்கள் இருவரையும் கொன்றால்தான் நிம்மதியாக தொழில் செய்ய முடியும் என்று கூறி சரமாரியாக கம்பு, கற்களால் அவரை தாக்கியுள்ளனர். இதில் சக்கரவர்த்திக்கு தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு இடங்களில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. இது நடந்து கொண்டிருந்த நேரம் ஒரு கும்பல் சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியனை தனியே தூக்கிச் சென்று பயங்கரமாக தாக்கியுள்ளது. மேலும் கல்விச்சில் சிறப்பு சார்பு ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் காவலர் சீனிவாசனும் காயம் அடைந்தனர். போலீஸ் ஜூப்பையும் கும்பல் தாக்கி சேதப்படுத்தியது.

இது குறித்து காவல் ஆய்வாளர் ஏ.டி.சக்கரவர்த்தி, வ்ததிராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சின்னக்கருப்பன் மகன் ஆசைத்தம்பி, சண்டியர் குருவையா, பெருமாள் மகன் மாரிமுத்து, சுப்பையா மகன் முருகன், செல்வராஜ் மகன் ஆசைத்தம்பி, சின்னக்கருப்பன் மகன், ஆசைத்தம்பியின் உறவினர்கள் சுமார் 60 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, இதில் மூவரை கைது செய்திருந்தனர். மேலும் பலரை தேடி வந்தனர்.

இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன், கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளர் சின்னப்பாண்டி ஆகியோர் தலைமையில் கோட்டையூர் சென்ற அதிரடிப் படையினர் போலீஸாரை தாக்கி, போலீஸ் வாகனத்தைச் சேதப்படுத்திய வழக்கில் 9 பெண்கள் உள்ளிட்ட 45 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.