அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோதல்: இருவருக்கு கத்திக் குத்து: மூவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் க.சுப்பிரமணியன் (53). இவரது மகன் சுதாகருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த

News image
Updated On :12 பிப்ரவரி 2013, 12:24 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு கோஷ்டியினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக் குத்து காயமும், இருவருக்கு கம்பால் அடித்ததில் காயமும் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீஸார் மூவரை கைது செய்தனர். மேலும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் க.சுப்பிரமணியன் (53). இவரது மகன் சுதாகருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த துர்காதேவி (22) என்பவருக்கும் 3.7.11-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். துர்காதேவியின் புகாரின் பேரில் சுதாகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக சுப்பிரமணியன் குடும்பத்தாரை துர்காதேவியின் குடும்பத்தார் மிரட்டி வந்தார்களாம். இந்நிலையில் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சுப்பிரமணியனும் அவரது மனைவி பார்வதி மற்றும் அழகம்மாள் ஆகியோர் வந்து கொண்டிருந்தார்களாம். அப்போது சுந்தர்ராஜ், சு.கருப்பசாமி (53), துர்காதேவி, கிருஷ்ணம்மாள், அன்புராஜ், பாண்டியன் (31) ஆகியோர் ஒன்று சேர்ந்து கத்தியால் குத்தினார்களாம். மேலும் பார்வதி அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை பறித்துச் சென்று விட்டார்களாம். இதில் சுப்பிரமணியன், பார்வதி, அழகம்மாள் ஆகியோர் காயம் அடைந்தனர். வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமி, பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். ஏனையோரை தேடி வருகிறார்கள்.

துர்காதேவி புகார்: துர்காதேவியும் அவரது சித்தப்பா க.சுந்தர்ராஜ் (49) ஆகிய இருவரும் மேலத்தெரு கருப்பசாமி வீடு அருகே வந்து கொண்டிருந்தபோது, சுப்பிரமணியன், சுப்புத்தாய், பார்வதி, கருப்பையா (42) ஆகியோர் துர்காதேவியை ஆபாசமாகப் பேசி அவர் அணிந்திருந்த சுடிதாரைப் பிடித்து இழுத்து கிழித்தார்களாம். மேலும் வயிற்றில் குத்தி காயப்படுத்தினார்களாம். தட்டிக்கேட்ட சித்தப்பாவை கம்பால் அடித்து காயப்படுத்தினார்களாம். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கருப்பையாவைக் கைது செய்தனர். ஏனையோரை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.