அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசு நிலத்தில் அனுமதியின்றி கல்குவாரி அமைத்து ரூ.28.23 லட்சம் மோசடி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கல் உடைத்து, குவாரி நடத்தி அரசுக்கு ரூ.28.23 லட்சம்வரை இழப்பு

News image
Updated On :14 பிப்ரவரி 2013, 1:12 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கல் உடைத்து, குவாரி நடத்தி அரசுக்கு ரூ.28.23 லட்சம்வரை இழப்பு ஏற்படுத்தியவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நாச்சியார்கோயில் கிராமத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள வண்டிப்பாதையில் புல எண் 588/12, 588/14 என்ற இடத்தின் 9 கி.மீ. தெற்கே அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி, நாச்சியார்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் வாசுதேவன் என்பவர் 8.3.11-ம் தேதிக்கு முன்பு கல் உடைத்து குவாரி நடத்தி அரசுக்கு ரூ.28,23,695 அளவிற்கு இழப்பு ஏற்படுத்தினாராம். இதனை நாச்சியார்பட்டி, நடுத்தெருவைச் சேர்ந்த வீரப்பநாயக்கர் மகன் பாலகிருஷ்ணன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அவருக்கு வாசுதேவன் கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.