பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50-ம் , டீசல் விலையை லிட்டருக்கு 50பைசாவும் உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களின் நலனில் தங்களுக்கு எந்தஅக்கறையும் இல்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒரு முறைநிரூபித்திருக்கிறது.மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் உயர்ந்துவிட்டன.
இந்த விலை உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஒரு மாதத்துக்குள் இரண்டாவது முறையாக டீசல் விலையை உயர்த்தி மக்களின் மீது தாங்க முடியாத சுமையை மத்திய அரசு சுமத்தியிருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்துவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்காக கலால்வரிக் குறைப்பு, சுங்க வரிக்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசுஎடுத்திருக்கவேண்டும். அதை விடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்வை மக்களின் தலையில் சுமத்துவது கண்டிக்கத்தக்கதாகும். எனவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


