அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி மேஸ்திரி தீண்டாமை வழக்கில் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வருபவர் குருசாமி மனைவி பஞ்சவர்ணம் (47). இதே பேரூராட்சியில் மேஸ்திரியாக வேலை செய்து வருபவர் சுந்தரமகாலிங்கம்

News image
Updated On :15 பிப்ரவரி 2013, 9:58 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் துப்புரவு பணியாளரை சாதியைக் கூறி ஆபாசமாகப் பேசி, மானபங்கம் செய்ய முயன்ற பேரூராட்சி மேஸ்திரி மணிவண்ணனை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வருபவர் குருசாமி மனைவி பஞ்சவர்ணம் (47). இதே பேரூராட்சியில் மேஸ்திரியாக வேலை செய்து வருபவர் சுந்தரமகாலிங்கம் மகன் மணிவண்ணன் (48). இன்று(வெள்ளிக்கிழமை) தெருக்களை சுத்தம் செய்ய மேஸ்திரி மணிவண்ணனிடம், துப்புரவு பணியாளர் பஞ்சவர்ணம் துடைப்பம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணிவண்ணன், பஞ்சவர்ணத்தை சாதியைக் கூறி ஆபாசமாகப் பேசி, சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்தாராம்.

இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேஸ்திரி மணிவண்ணனைக் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.