பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

முதல்வருக்கு பழ.நெடுமாறன் பாராட்டு

இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதற்காக ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என முதல்வர் ஜெயலலிதா

Updated On :22 பிப்ரவரி 2013, 1:36 pm

ஆசிய தடகளப் போட்டிகளை தமிழத்தில் நடத்த மறுத்துள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதற்காக ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனைப் பாராட்டி வரவேற்கிறேன்.அண்மைக் காலமாக தமிழக உரிமைகளைப் பாதுகாக்கவும் நிலைநாட்டவும் மத்திய அரசுடன் போராடும் துணிவுடன் முதல்வர் செயல்படுகிறார்.முதல்வருக்கு, கட்சிகளுக்கு அப்பாற்றப்பட்டு தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.