நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அவதூறு வழக்கு : விழுப்புரம் நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜர்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் கீழ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

News image
Updated On :25 பிப்ரவரி 2013, 12:23 pm IST

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் கீழ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு  வழக்குப் பதிவு செய்தது. இதன்படி, இவ்வழக்கில் இன்று நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, விஜயகாந்த் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கடந்த வருடம் ஆக.8ம் தேதி விழுப்புரத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசினார் என்று, அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன்படி, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த ஜன.8ம் தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்றது. அதில் விஜயகாந்த் நேரில் ஆஜராகவில்லை. பின்னர் 12.2.2013ல் விசாரணையிலும் அவர் ஆஜராகவில்லை. இதனால் அடுத்த விசாரணையின் போது விஜயகாந்த் அவசியம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தியாகராஜ மூர்த்தி கூறியிருந்தார். அதன்படி அவர் இன்று ஆஜரானார்.

அவரைக் காண கட்சிக்காரர்கள் நீதிமன்றத்தில் அதிக அளவில் கூடினர். அவருடன் சுமார் 200 வழக்குரைஞர்கள் வந்திருந்தனர். 5 எம்.எல்.ஏ.க்களும் வந்திருந்தனர். அவர்களில் இருவர் வழக்குரைஞர்கள். இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்.25க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.