புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிளஸ் தேர்வு : மின் தடையை தவிர்க்க ஜெனரேட்டர்கள் தயார்

தமிழகத்தில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை தேர்வுத் துறை முழு வீச்சில் செய்து வருகிறது.

News image
Updated On :28 பிப்ரவரி 2013, 9:05 am

ஜபலின் ஜான்

தமிழகத்தில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை தேர்வுத் துறை முழு வீச்சில் செய்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 28,000 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மின்தடை ஏற்படுவதை தவிர்க்க அனைத்துத் தேர்வு மையங்களிலும் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 60 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான வினாத்தாள் 8 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஈரோடு கல்வி மாவட்டத்தில் 28 தேர்வு மையங்களில் 86 பள்ளிகளை சேர்ந்த 12,951 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதேபோல கோபி கல்வி மாவட்டத்தில் 32 தேர்வு மையங்களில் 90 பள்ளிகளை சேர்ந்த 15,047 பேர் தேர்வு எழுதுகின்றனர். இரு கல்வி மாவட்டங்களிலும் சேர்த்து 60 மையங்களில் 176 பள்ளிகளை சேர்ந்த 27,998 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு நேரத்தின்போது மின்தடை ஏற்படும் போது பயன்படுத்த ஜெனரேட்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வை சிறப்பாக எழுதி மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடிக்க மாணவ, மாணவிகள் முயற்சிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.