இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்துங்கள்: திருமாவளவனுக்கு, ராமதாஸ் வேண்டுகோள்

சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் இளைஞர் படை தொடக்கவிழா இன்று நடைபெற்றது. விழாவில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் பங்கேற்று
இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்துங்கள்: திருமாவளவனுக்கு, ராமதாஸ் வேண்டுகோள்
Updated on
1 min read

தங்களது சமுதாய இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்தி வழிகாட்டுங்கள் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் இளைஞர் படை தொடக்கவிழா இன்று நடைபெற்றது. விழாவில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது:  இளைஞர் படையின் மூலம் 2016-ல் பாமக ஆட்சி மலரும் என்பது உறுதியாகிவிட்டது. இனிமேல் திமுக, அதிமுக கட்சிகள் வேண்டாம். இந்த கட்சிகளை ஒழிக்க வன்னிய இளைஞர்களை நம்பி இந்த வேலையை தொடங்கி உள்ளோம்.

பாமக இளைஞர்களுக்கு மொழி, பண்பாடு, கலை. நாகரீகத்தை பின்பற்றுங்கள்,  வன்முறை, தீவிரவாதம், ஆபாசம், பெண்ணடிமை, பாலியல் வன்முறை உள்ளிட்டவையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்கவும் உறுதி கூறி வழிகாட்டி வருகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதாக கூறும் ஒரு கட்சி தலைவர் அந்த சமுதாய இளைஞர்களுக்கு அத்துமீறு, அடங்கமறு, ஆர்த்தெழு, திமிரிஎழு, திருப்பிஅடி என அறிவுரை கூறுகிறார். இது இளைஞர்களை எங்கோ கொண்டு விட்டுவிடும். இது சமுதாய நல்லிணகத்திற்கு, அமைதிக்கு வழி வகுக்காது. எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் இளைஞர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சமுதாயத்திற்கு பாடுபடுகின்ற சமூக நல்லிணக்க கட்சி அல்ல. பக்குவப்பட்ட அரசியல் கட்சியும் இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மத்தியில் 15 சதவீத வேலைவாய்பும், மாநிலத்தில் 18 சதவீத வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதை கொண்டு முன்னேறி விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ ஆகலாம். மேலும் கருவறையிலிருந்து, கல்லறை வரை அனைத்து சலுகைகளும் உள்ளது. அதை பாராட்டுகிறேன். வன்னியர் மக்களுக்கு என்ன சலுகை உள்ளது. எனவே தான் தனி இடஒதுக்கீடு கேட்டு வருகிறோம்.  நாங்கள் இளைஞர்களை தமிழ் பண்பாட்டை வளருங்கள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுங்கள் என கூறுகிறோம். நல்ல குடும்ப பெண்ணை தேடி மணம் முடியுங்கள் என வழிகாட்டுகிறோம். ஆனால் நீங்கள் அழகாக உடை உடுத்திக் கொள், ஒரு பெண்ணை காதலி, ஒரசி நில்லு, சடையை பிடித்து இழு என சொல்லிக் கொடுக்கீறீர்கள். .புதுச்சேரி மாநிலத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் தாழ்த்தப்பட்டவர்களாக உள்ளதால், மாணவி பாலியல் பலாத்காரம் குறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை. தற்போது நம்முடைய பெண்களை பாதுகாப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்புங்கள். அநீதி ஏற்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்.  காவல்துறை நடவடிக்கை எடுக்காவிடில் காவல்நிலையம் முன்பு அமைதியாக அமர்ந்து போராட்டம் நடத்துங்கள்.

-இவ்வாறு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com