குடும்ப அட்டைகளுக்கு சிறப்பு பொங்கல் பரிசு : முதல்வர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு ரூ.160 மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு ரூ.160 மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழை பொய்த்ததாலும், வறட்சி நிலவுவதாலும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் சுமார் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 160 ரூபாய் மதிப்பிலான சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்று அளிக்கப்படும்.
இந்த தொகுப்பில், 20 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ பச்சரிசி, 40 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக்காக இதர பொருட்கள் வாங்குவதற்காக 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கும்.
இந்த தொகுப்பு அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
இதனால், விவசாயிகளின் துயர் துடைக்க வழி வகுப்பதோடு, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...