சாத்தான்குளம் அருகே சத்துணவு சமையலரை தாக்கியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் சாமுவேல் மனைவி பாத்திமா ( 40) இவர் அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் சத்துணவு சமையலராக உள்ளாராம். நேற்று(வெள்ளிக்கிழமை) அங்குள்ள பொது நல்லி குழாயில் துணி துவைத்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த கட்டடத்தொழிலாளி ஏ.ரூபன் (24) அவரை கண்டித்தாராம். அதில் ஏற்பட்ட தகராறில் பாத்திமாவை ரூபன் அடித்து காயபடுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பாத்திமா அளித்த புகாரின் பேரில் உதவி-ஆய்வாளர் கற்பகவள்ளி வழக்குபதிவு செய்து ரூபனை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.