/

பொங்கல் பண்டிகை: 4800 சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு எளிதாக சென்று வரும் வகையில் 4800

Updated On :8 ஜனவரி 2013, 3:26 pm

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு எளிதாக சென்று வரும் வகையில் 4800 கூடுதல் சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்க உள்ளது.இந்த கூடுதல் சிறப்பு பஸ்களில் சாதாரண கட்டணமே வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், பயணிகள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012 நவம்பரில் தீபாவளிப் பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் 6859 பஸ்களையும், சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2828 சிறப்பு பஸ்களையும் தமிழக அரசு இயக்கியது.இப்போது ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு, தமிழகம் முழுவதும் 4800 சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதில் சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 2000 சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த சிறப்பு பஸ்கள் ஜனவரி 11, 12, 13 ஆகிய பொங்கலுக்கு முந்தைய தேதிகளிலும், பின்னர் பண்டிகை விடுமுறை முடிந்து 17, 18, 19, 20 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளன.கடைசி நேரத்திலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால், முன்பதிவு செய்யாதவர்களுக்கும் எளிதாக இடம் கிடைக்கும். எனவே, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து ஏமாறுவதை பயணிகள் தவிர்க்கலாம் என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.