ஒரே விமானத்தில் விஜயகாந்த், மு.க. அழகிரி!
மதுரைக்கு வந்த 7.40 ஜெட் நிறுவன விமானத்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் வந்திறங்கினர்.


மதுரைக்கு வந்த 7.40 ஜெட் நிறுவன விமானத்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் வந்திறங்கினர்.
வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியின் பொங்கல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விஜயகாந்த் வந்திருப்பதாகத் தெரிகிறது. இவர் மதுரையில் வியாழன் இரவு தங்கி வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
மு.க. அழகிரி வழக்கமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இருவரும் ஒரே விமானத்தில் வந்திறங்கிய போதும், இருவரும் எதுவும் பேசிக் கொண்டதாகத் தகவல் இல்லை. விமான நிலையத்தில் இறங்கிய பிறகும் மனைவி பிரேமலதாவுடன் விஜயாகாந்த் முதலில் சென்றுவிட்டார். பின்னர் சற்று நேரம் கழித்து மு.க. அழகிரி சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...