பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை போராட்டம்
சென்னைக்கு குடிநீர் அனுப்புவதை நிறுத்தி வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட வலியுறுத்தி கடலூர்


சென்னைக்கு குடிநீர் அனுப்புவதை நிறுத்தி வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட வலியுறுத்தி கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
வீராணம் ஏரியிலிருந்து வேளாண் பாசனத்திற்கு நீரை திறக்க வேண்டும். சென்னைக்கு குடிநீர் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். மாநில கருத்தியல் பரப்பு செயலாளர் சு.திருமாறன், நிர்வாகிகள் கோ.நீதிவளவன், அருள்கொடி, தமிழ்க்குமரன், மாவட்ட துணைச் செயலாளர் பி.குறிஞ்சிவளவன், இளவழகன், ரா.நெடுமாறன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, செல்வ.செல்வமணி, பால.அறவாழி, முத்தையன், அரசு, சபாநாயகம், ஆதிமூலம், வெற்றிவேந்தன், சரித்திரன், இன்பவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...