எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

என்ஜின் பழுதானதால் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16854) இன்று பிற்பகல் 12.45 மணிக்கு சிதம்பரம் அருகே உசுப்பூர் ரயில்வே கேட் அருகே என்ஜின் பழுதாகி நின்றது. அப்போது சென்னையிலிருந்து திருச்சி

News image
Updated On :13 ஜனவரி 2013, 9:59 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே என்ஜின் பழுதாகி நின்றதால் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக சென்றது.

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16854) இன்று பிற்பகல் 12.45 மணிக்கு சிதம்பரம் அருகே உசுப்பூர் ரயில்வே கேட் அருகே என்ஜின் பழுதாகி நின்றது. அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16853) சிதம்பரம் ரயில்நிலையத்திற்கு பிற்பகல் 1.25 மணிக்கு வந்து 2-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது. அந்த ரயிலின் என்ஜினை கழற்றிச் சென்று பொருத்தி திருச்சி-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை 2.10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்னை சென்றது. பின்னர் மயிலாடுதுறையிலிருந்து வேறு என்ஜின் வரவழைக்கப்பட்டு அந்த என்ஜினை சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்து சென்னை-திருட்டி செல்லும் ரயிலில் பொருத்தி அந்த ரயில் பிற்பகல் 2.20 மணிக்கு திருச்சி நோக்கி சென்றது. என்ஜின் பழுதாகி நின்றதால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அவதியுற்றனர். இதனால் திருச்சி-சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகவும், சென்னை-திருச்சி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகவும் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.