தமிழக முதல்வர் ஜெயலலிதா வ.புதுப்பட்டி பகுதியில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த இரு தரப்பினர் நீண்ட காலமாக மோதிக்கொள்ளும் நிலையை கட்டுப்படுத்த, வ.புதுப்பட்டியில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் தனி காவல் நிலையம் அமைக்கப்படும் என்றும், சுமார் 60 போலீஸார் அடங்கிய ஒரு கம்பெனி சிறப்பு காவல் படையினர் நிரந்தரமாக இங்கு நிறுத்தப்படுவார்கள் என்றும் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்தப்பட்டு, மோதல் சம்பவங்கள் தடுக்கப்பட்டால் தான் உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதத்தை உடனடியாக கட்டுப்படுத்த இயலும் என்று இப் பகுதி மக்கள் கருதுகிறார்கள்.