2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி-ஆம்னி வேன் மோதல்: ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை மதியம் லாரியும் ஆம்னி வேனும் நேர்க்கு நேர் மோதிக் கொண்டதில் ஆம்னி வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News image
Updated On :18 ஜனவரி 2013, 11:35 am

கே.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை மதியம் லாரியும் ஆம்னி வேனும் நேர்க்கு நேர் மோதிக் கொண்டதில் ஆம்னி வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுரை, விராட்டிபத்தைச் சேர்ந்தவர் பொன்னுக்கோனார் மகன் மதுரைவீரன் (62). இவரது மனைவி லட்சுமி (55) ஆகியோர் வெள்ளிக்கிழமை ராஜபாளையம் பழைய பஸ்நிலையம் அருகேயுள்ள குலதெய்வமான காமாட்சியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வாடகைக்கு ஒரு கால் டாக்ஸி (ஆம்னி-வேன்) எடுத்து வந்துள்ளனர்.

வேனை டிரைவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரும் தற்போது மதுரை, காளவாசலில் குடியிருந்தவருமான முனுசாமி மகன் சுபாஷ் சந்திரபோஸ் (22) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

வேன் ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பகுதி போக்குவரத்து அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் டிரைவர் சுபாஷ் சந்திரபோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த மதுரைவீரன், லட்சுமி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிசிக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.