எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கடலூர் மாவட்டத்திற்கு நிதிஅமைச்சர் தலைமையிலான குழு வராததற்கு உழவர் முன்னணி கண்டனம்

தமிழக உழவர் முன்னணி மாவட்ட   செயற்குழுக்கூட்டம்  நடைபெற்றது. தலைவர் அ.கோ.சிவராமன் தலைமை வகித்தார். செயலாளர் சி.ஆறுமுகம், துணைச் செயலாளர் ரா.சரவணன், செயற்குழு உறுப்பினர்கள்

News image
Updated On :21 ஜனவரி 2013, 12:57 pm

G.Sundararaj

காவிரி பாசன பகுதியை ஆய்வு மேற்கொண்ட தமிழக நிதிஅமைச்சர் தலைமையிலான குழு கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசன பகுதிகளை பார்வையிட வராததற்கு தமிழக உழவர் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக உழவர் முன்னணி மாவட்ட   செயற்குழுக்கூட்டம்  நடைபெற்றது. தலைவர் அ.கோ.சிவராமன் தலைமை வகித்தார். செயலாளர் சி.ஆறுமுகம், துணைச் செயலாளர் ரா.சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் தங்க கென்னடி, அ.மதிவாணன், கோ.வெங்கடாசலம், க.கிருஷ்ணமூர்த்தி, வெ.பொன்னுசாமி, மா.கோ.தேவராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழகஅரசு கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்; வடக்குராஜன்வாய்க்கால், வீராணம் பாசனப் பகுதிகளுக்கு பிப்ரவரி 15-ம் தேதி வரை ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விடக்கோருவது; பம்ப் செட்டுகளுக்கு வழங்கும் தண்ணீர் கடத்தும் குழாயை தகுதியுள்ள விவசாயிகள் அனைவருக்கும் வழங்க வேண்டும்; காவிரி உரிமை மீட்புக்குழு அறிவித்துள்ள பிப்ரவரி 16 அன்று அடியக்கமங்கலம் சுத்திகரிப்பு ஆலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.