எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சில அரசியல் கட்சி தலைவர்கள் சாதியத்தை தூண்டி மக்களை தவறாக பயன்படுத்துவதை கண்டிக்கிறேன்: ஜான்பாண்டியன்

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் சில பகுதிகளில் குறந்துள்ளது, சில பகுதிகளில் நிறைந்துள்ளது. இருப்பினும் தற்போது. குறிப்பாக சாதிய பிரச்சனைகள் தென்

News image
Updated On :21 ஜனவரி 2013, 9:41 am

G.Sundararaj

இயற்கையாக நடைபெறும் சண்டையை, சில அரசியல் கட்சிகளால் சாதியக் கலவரமாக உருவாக்கி சித்திரிக்கப்படுகிறது. சாதிய தீயை தூண்டி மக்களை தவறாக பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் சில பகுதிகளில் குறந்துள்ளது, சில பகுதிகளில் நிறைந்துள்ளது. இருப்பினும் தற்போது. குறிப்பாக சாதிய பிரச்சனைகள் தென் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் குறைந்துள்ளது. தற்போது குறைந்து வரும் இந்நேரத்தில் சில அரசியல் கட்சித்தலைவர்கள் மக்களை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். சாதிய தீயை அதிகளவு பரப்பி வரும் அரசியல் தலைவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சாதிய பிரச்சனைக்கு தொழில் ரிதியாக நிர்பந்தம் மற்றும் வருமானம் இல்லாததுதான் காரணம். தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு அனைத்து சமுதாய மக்கள் ஒன்றாக பணியாற்றுபோது இந்த பிரச்சனை ஏற்படாது. வன் கொடுமை சட்டத்திற்கு திருத்தம் செய்வது தவறாகும். அதனை மேலும் பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அச்சட்டத்தை செயல்படுத்த உறுதியாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும் என ஜான்பாண்டியன் தெரிவித்தார்.

உடன் பொதுச்செயலாளர் பிரஸ்சில்லா பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், நகர அமைப்பாளர் ம.பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.