கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மனோகரன்(55). இவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கப்படுவதாக ஆரம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் மனோகரனின் வீட்டிற்கு சென்று போலீஸார் சோதனை நடத்தியதில் வீட்டில் 20 கிலோ அரிசி அடங்கிய 15 மூட்டைகள் பதுக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் கடையில் அரிசி வாங்குபவர்களிடம் இவர் இந்த அரிசியை வாங்கி பதுக்கியிருந்ததும், அந்த அரிசி வேறுநபர்களுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.தொடர்ந்து அங்கிருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை ஆரம்பாக்கம் போலீஸார் பறிமுதல் செய்து மனோகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.