டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் பதுக்கி இருந்த 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மனோகரன்(55). இவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கப்படுவதாக ஆரம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் மனோகரனின் வீட்டிற்கு சென்று போலீஸார் சோதனை நடத்தியதில் வீட்டில் 20 கிலோ

News image
Updated On :24 ஜனவரி 2013, 9:29 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி இருந்த 300கிலோ ரேஷன் அரிசியை புதன்கிழமை ஆரம்பாக்கம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மனோகரன்(55). இவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கப்படுவதாக ஆரம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் மனோகரனின் வீட்டிற்கு சென்று போலீஸார் சோதனை நடத்தியதில் வீட்டில் 20 கிலோ அரிசி அடங்கிய 15 மூட்டைகள் பதுக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் கடையில் அரிசி வாங்குபவர்களிடம் இவர் இந்த அரிசியை வாங்கி பதுக்கியிருந்ததும், அந்த அரிசி வேறுநபர்களுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.தொடர்ந்து அங்கிருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை ஆரம்பாக்கம் போலீஸார் பறிமுதல் செய்து மனோகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.