டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தி.மு.க-வின் தூண்டுதலின் பேரில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது: அமைச்சர் பி.வி.ரமணா குற்றச்சாட்டு

தங்கு தடையில்லாமல் நிறைவேற்றப்படுகிறது என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய உணவு தானியங்கள், மண்ணெண்ணை, நிதி போன்றவைகளை தி.மு.க-வின் தூண்டுதல் பேரில் மத்திய அரசு தராமல் தமிழகத்தை புறக்கணிக்கிறது என்றும் காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனைகளில் மத்திய

News image
Updated On :27 ஜனவரி 2013, 10:47 am

பா.ஜான்பிரான்சிஸ்

தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய உணவு தானியங்கள், மண்ணெண்ணை, நிதி போன்றவைகளை தி.மு.க-வின் தூண்டுதல் பேரில் மத்திய அரசு தராமல் தமிழகத்தை புறக்கணிக்கிறது என கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுகூட்டத்தில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க மாணவரணி சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் டி.முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட குழு தலைவர் பி.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி, பேரூராட்சி தலைவர் முத்துகுமரன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் டி.இ.முரளி, அம்மா பேரவை தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்  தலைமை உரையாற்றிய தமிழக வணிக வரி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பி.வி.ரமணா பேசுகையில் இந்தியாவில் ஊழல் வழக்கில் ஆட்சி இழந்த முதல் முதல்வர் என்ற பெருமை தி.மு.க தலைவர் கருணாநிதியையே சேரும் என்றும்,  தமிழகத்தை பிடித்துள்ள சாபமாக கருணாநிதியின் தி.மு.க இருந்து வரும் வேளையில், அந்த சாபத்தை நீக்கி தமிழகத்தின் வரமாக உள்ள கட்சியே அ.தி.மு.க என்றும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் பல்வேறு நல்ல திட்டங்கள் தங்கு தடையில்லாமல் நிறைவேற்றப்படுகிறது என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய உணவு தானியங்கள், மண்ணெண்ணை, நிதி போன்றவைகளை தி.மு.க-வின் தூண்டுதல் பேரில் மத்திய அரசு தராமல் தமிழகத்தை புறக்கணிக்கிறது என்றும் காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டிய அமைச்சர், இந்தியாவில் உள்ள முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக திகழ்கிற தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய துணை கண்டத்தை சிறப்பாக ஆளும் சக்தி படைத்தவர், அப்படி ஒரு நிலையை அடைய வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இந்த மொழிப் போர் தியாகிகளின் வீரவணக்க நாளில் அ.தி.மு.க-வினர் சபதம் மேற்கொள்ள வேண்டும் என்றூ கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.