கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர், நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் க.முத்துச்சாமி (64). இவரது மகள் பாக்கியலட்சுமி (32) யை வத்திராயிருப்பு, மேலத்தெருவைச் சேர்ந்த நாகேந்திரன்


ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் க.முத்துச்சாமி (64). இவரது மகள் பாக்கியலட்சுமி (32) யை வத்திராயிருப்பு, மேலத்தெருவைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.நாகேந்திரன் வாகன விபத்தில் 3.11.12-ம் தேதி உயிரிழந்தார். அதிலிருந்தே மன வேதனையில் இருந்த பாக்கியலட்சுமி திங்கள்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை வீட்டில் பாக்கியலட்சுமி உயிரிழந்த நிலையில கிடந்துள்ளார்.
இது குறித்து தந்தை க.முத்துச்சாமி, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...