ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர், ஊரணிபட்டித் தெருவைச் சேர்ந்தவர் நா.பாலகிருஷ்ணன் (55). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் வாசலில் இருந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஊரணிபட்டித் தெருவைச் சேர்ந்தவர் நா.பாலகிருஷ்ணன் (55). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவரது தாய் நாச்சியார், நேற்று(செவ்வாய்கிழமை) இரவு வீட்டின் வாசலில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் முகவரி விசாரிப்பது போன்று நாச்சியாரிடம் விசாரித்துக்கொண்டே, அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை பறித்துச் சென்று விட்டாராம்.
இது குறித்து மகன் பாலகிருஷ்ணனிடம் நாச்சியார் கூறியுள்ளார். அவர் பல இடங்களில் நகையை பறித்துச் சென்ற நபரைத் தேடியும் கிடைக்கவில்லையாம். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...