அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல குற்றவாளி கைது

நெய்வேலி வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (30). இவரை அனுமதியின்றி பிஸ்டல் துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த 2005-ம் ஆண்டு சேத்தியாத்தோப்பு போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்த

News image
Updated On :1 ஜூலை 2013, 12:43 pm

G.Sundararaj

ஒன்றரை வருடமாக தலைமறைவாக இருந்க பிரபல குற்றவாளி ஒருவரை கடலூர் மாவட்ட தனிப்படை போலீஸார் சிதம்பரம் பஸ் நிலையத்தில் கைது செய்தனர்.

நெய்வேலி வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (30). இவரை அனுமதியின்றி பிஸ்டல் துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த 2005-ம் ஆண்டு சேத்தியாத்தோப்பு போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்த 2006-ம் ஆண்டு மயிலாடுதுறையில் டெலிபோன் ரவியை கொலை செய்த வழக்கிலும், அதே ஆண்டு குடவாசலில் விடுதலைச்சிறுத்தைகள் பிரமுகர் இனியன் என்பவரை கொலை செய்த வழக்கிலும் ஹரிகிருஷ்ணன் குற்றவாளியாக உள்ளார். இந்நிலையில் சேத்தியாத்தோப்பில் துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா, ஹரிகிருஷ்ணனை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படையினரிடம் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீஸார் சிதம்பரம் பஸ்நிலையத்தில் ஹரிகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். பின்னர் ஹரிகிருஷ்ணனை சேத்தியாத்தோப்பு போலீஸார் சிதம்பரம் நம்பர்-2 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.