அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ கவுன்சிலிங் நாளை தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி வேளாண் ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்கி 7-ம் தேதி வரை


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி வேளாண் ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் நல்ல முறையில் தகுதி அடிப்படையிலும், அரசு இடஒதுக்கீடு விதிமுறைப்படி அனுமதி சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற தமிழக முதல்வரின் நோக்கமாகும். அதனடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபிடி, பி.பார்ம், பிஎஸ்சி நர்சிங், பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ஜூன் 7,8,9 தேதிகளில் நடைபெற்றது.
பிஇ படிப்புகளுக்கு 3410 பேரும், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு 6766 பேரும் தேர்வெழுதினர். அதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை 22.6.2013 அன்று பல்கலைக்கழக இணையதள முகவரி www.annamalaiuniversity.ac.in ல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகஅரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதனையடுத்து பிஇ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரையும், வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. பிஇ படிப்பிற்கு 2800 பேரும், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு 1500 பேரும் சேர்க்கப்படுவார்கள். 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் முதுகலை பட்ட படிப்புகள் உள்ளிட்ட இதர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 5-ம் தேதி இறுதிநாளாகும். அதற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...