இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் நகரில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார கோரிக்கை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் ஸ்ரீநடராஜர் கோயில் அமைந்துள்ள முதன்மையான திருத்தலமாகும். கோயிலுக்கு தொடர்புடைய 12 தீர்த்த குளங்கள் நகரில் உள்ளது. சோழ மன்னர்கள் காலத்திலிருந்து இன்று

News image
Updated On :2 ஜூலை 2013, 11:24 am

G.Sundararaj

சிதம்பரம் நகரம் மற்றும் சுற்றிப்புற கிராமங்களில் உள்ள  குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்பு குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் ஸ்ரீநடராஜர் கோயில் அமைந்துள்ள முதன்மையான திருத்தலமாகும். கோயிலுக்கு தொடர்புடைய 12 தீர்த்த குளங்கள் நகரில் உள்ளது. சோழ மன்னர்கள் காலத்திலிருந்து இன்று வரை கோயிலும், 12 தீர்த்த குளங்களும் உலகம் போற்றும் வண்ணம் நமது புராணங்களை நிலை நிறுத்தும் விதமாக திகழ்கிறது. நகரில் வசிக்கும் மக்களின் தாகத்தை போக்கி அன்றாட நல்வாழ்விற்கு இந்த புண்ணிய தீர்த்த குளங்கள் விளங்குகின்றன. தற்போது இக்குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் நீரின்றி உள்ளதால், நகரில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போய் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோயிலின் உள்ளே சிவகங்கை குளம், சிவசக்தி வடிவமாக கருத்தப்படும் பரமானந்த கூடமும் உள்ளது. நகரில் இளமையாக்கினார் கோயில் குளம், ஞானப்பிரகாசர் குளம், அனந்தீஸ்வரர் கோயில் வியாக்கிரபாதர் தீர்த்த குளம், நாகச்சேரி குளம், ஓமக்குளம், திருப்பாற்கடல் குளம், சிவப்பிரியை குளம், ஆயிகுளம், பிரம்மதீர்த்தம், புலிச்சமேடு ஆகிய தீர்த்த குளங்கள் உள்ளன. இவையல்லாமல் நகரின் மையப்பகுதியில் ஓடும் பாலமான் ஆறு தற்போது தூர்ந்துபோய் அகலம் குறைந்து வெறும் ஆறு அடி அகலத்தில் கூவமாக ஓடுகிறது. எனவே இந்த ஆறு, குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினருடன் ஒப்படைத்தால், அவற்றை எதிர்காலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், நீர் நிலைகளை பேணி பாதுகாக்கவும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக பராமரிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.