இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நடராஜர் கோயில் தரிசனம் 2.30 மணிக்குள் முடிக்க ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசனத்தை பிற்பகல் 2.30 மணிக்கு நடத்தி முடிப்பது என பொதுதீட்சிதர்கள் ஒப்புதலுடன் அனைத்துதுறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு

News image
Updated On :2 ஜூலை 2013, 10:22 am

G.Sundararaj

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசனத்தை பிற்பகல் 2.30 மணிக்கு நடத்தி முடிப்பது என பொதுதீட்சிதர்கள் ஒப்புதலுடன் அனைத்துதுறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞசன தேர், தரிசனம் ஜூலை 13,14 தேதிகளில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பொதுதீட்சிதர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக்கூட்டம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு உதவிஆட்சியரின் நேர்முக உதவியாளர் தில்லைகோவிந்தன் தலைமை வகித்தார். டிஎஸ்பி ஆர்.ராஜாராம் முன்னிலை வகித்தார். டிஎஸ்பி ஆர்.ராஜாராம் பேசுகையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அந்ததந்த துறையினர் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தரிசனத்தை பொதுமக்கள் நலன் கருதி குறிப்பிட்ட நேரத்தில் பொதுதீட்சிதர்கள் நடத்தி முடிக்க வேண்டும். மேலும் கோயிலில் 4 கோபுர வாயில்களிலும் கண்காணிப்பா கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். திருட்டு குற்றத்தை தடுக்க போலீஸார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.

கூட்டத்தில் வட்டாட்சியர் எம்.விஜயா, தனி வட்டாட்சியர் (கோயில் நிலங்கள்) இ.ராமச்சந்திரன், இந்து அறநிலையத்துறை நடராஜர் கோயில் செயல்அலுவலர் க.கிருஷ்ணகுமார், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரா.பரமேஸ்வரி, மின்வாரிய உதவிப் பொறியாளர் கே.மாலதி, பொதுதீட்சிதர்கள் செயலாளர் காசிராஜ தீட்சிதர், நகரமன்ற உறுப்பினர் நடனசபாபதி தீட்சிதர், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், நிர்வாகிகள் மோகன், சந்திரசேகரன், முத்துகணேசன், பாலகிருஷ்ணன், பாஜக சீனுவாசன், பக்தர் பேரவை ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.அன்பழகன் மற்றும் தீயணைப்புத்துறையினர், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஜூலை 14-ம் தேதி தரிசனத்தை பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணிக்குள் முடிப்பது, பக்தர்களுக்கு சுவாமியை மறைக்காதவாறு வெண்சாமரம் பயன்படுத்த பொதுதீட்சிதர்களை கேட்டுக்கொள்வது, ஜூலை 13,14 தேர், தரிசனம் நாட்களில் இறைச்சி மற்றும் அசைவ ஹோட்டல் மூடுவது, டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வது, தேர், தரிசன நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது, போக்குவரத்து மாற்றம் செய்வது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.