இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ கவுன்சிலிங் தொடங்கியது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கிய பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி வேளாண் ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வில் (கவுன்சிலிங்) தகுதி அடிப்படையில்

News image
Updated On :3 ஜூலை 2013, 9:36 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கிய பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி வேளாண் ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வில் (கவுன்சிலிங்) தகுதி அடிப்படையில் முதல் மூன்று இடங்களை மாணவ, மாணவியர்களுக்கு அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. கவுன்சிலிங் ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஜூலை 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபிடி, பி.பார்ம், பிஎஸ்சி நர்சிங், பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ஜூன் 7,8,9 தேதிகளில் தமிழகத்தில் 7 நகரங்களில் நடத்தப்பட்டது. மருத்துவப்படிப்புகளுக்கு 12,202 பேரும், பிஇ படிப்புகளுக்கு 3410 பேரும், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு 6766 பேரும் தேர்வெழுதினர். அதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை கடந்த ஜூன் 22-ம் தேதி பல்கலைக்கழக இணையதள முகவரி www.annamalaiuniversity.ac.in ல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகஅரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. இதனையடுத்து பிஇ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று(ஜூலை 3-ம் தேதி) பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் தொடங்தியது. முதல் நாள் கவுன்சிலிங்கில் தகுதி அடிப்படையில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த எஸ்.நவீன், காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த மாணவி அருணா, சென்னை தி.நகரைச் சேர்ந்த டி.ஷில்டன்பிரேசிர் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். இவர்களுக்கு அனுமதி சேர்க்கைக்கான ஆணையை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, பொறியியல் புல முதல்வர் வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் பிஇ படிப்பிற்கான கவுன்சிலிங் 7-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தது: பிஇ படிப்பிற்கு 2800 பேரும், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு 1500 பேரும் சேர்க்கப்படுவார்கள். பிஇ படிப்பில் சேருவதற்கு 3410 பேர் நுழைவுத்தேர்வு எழுதினர். இதில் தகுதி அடிப்படையிலும், அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் முதல்கட்டமாக 730 பேருக்கு கலந்தாய்வில் பங்கேற்க கடிதம் அனுப்பப்பட்டது. இன்று காலை நடைபெற்ற கவுன்சிலிங்கில் 110 மாணவ, மாணவியர்களுக்கு அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. பிஇ படிப்பிற்கான கவுன்சிலிங்கில் குறிப்பிட்ட தேதிகளில் பங்கேற்க முடியாதவர்கள் ஜூலை 7-ம் தேதிக்குள் பங்கேற்கலாம். அரசு பொறுப்பேற்ற நடத்தப்படும் முதல் கவுன்சிலிங்கில் மாணவர்களும், பெற்றோர்களும் உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.