சிதம்பரம் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிதம்பரம் நகரில் நான்கு வீதிகளில், சன்னதிகளில் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்பினால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால் நகரில் போக்குவரத்து நெருக்கடி


சிதம்பரம் நகர தேரோடும் வீதிகளில் நகராட்சி சார்பில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன.
சிதம்பரம் நகரில் நான்கு வீதிகளில், சன்னதிகளில் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்பினால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்திற்கு, பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் நகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினார்.
இதனையடுத்து நகராட்சி சார்பில் நகர அமைப்பு ஆய்வாளர் அருள்செல்வம், சுகாதார ஆய்வாளர் மோகனரங்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை சிதம்பரம் நகரில் மேலரதவீதி, கஞ்சித்தொட்டி, வடக்குவீதி, கீழரதவீதி, மேலசன்னதி, கீழசன்னதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வீதிகள் விசாலமாக காட்சியளிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...