இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மழை வேண்டி ஜூலை 12-ல் திருஞான சம்பந்தர் பதிகங்கள் படிக்க இந்து ஆலய பாதுகாப்புக்குழு கோரிக்கை

சிதம்பரம் நகரில் உள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை தூர் வாரக்கோரியும், மழை வேண்டியும் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபடுவது என இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் முடிவு

News image
Updated On :3 ஜூலை 2013, 1:17 pm

G.Sundararaj

மழை வேண்டி சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து மக்களும் வருகிற ஜூலை 12-ம் தேதி திருஞானசம்பந்தர், சுந்தரர் பதிகங்களில் பாடல்களை படிக்க வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக்குழு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சிதம்பரம் நகரில் உள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை தூர் வாரக்கோரியும், மழை வேண்டியும் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபடுவது என இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் முடிவு எடுத்து சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் போது மழை வேண்டி அனைவரும் வருகிற ஜூலை 12-ம் தேதி திருஞானசம்பந்தர், சுந்தரர் பதிகங்களில் உள்ள அதற்குண்டான பாடலை படிக்க வேண்டும் எனவும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தூர்வார வலியுறுத்தி கோரிக்கை விடுத்து நகர மக்கள் ஜூலை 22-ல் 50 பைசா தபால் கார்டில் எழுதி மாவட்ட ஆட்சியருக்கு சுமார் 20 ஆயிரம் தபால்கள் அனுப்புவது. ஜூலை 29ல் தமிழக முதல்வரின் முதன்மை செயலரை சந்தித்து மனு அளிப்பது, ஆகஸ்டு 3-ல் சிதம்பரம் வட்டம் முழுவதும் மரம் நடுவது என துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரசாரத்திற்கு பொதுச்செயலாளர் ஜோதிகுருவாயூரப்பன் முன்னிலை வகித்தார். தலைவர் மு.செங்குட்டுவன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பொருளாளர் ராம.சபேசன், சங்கரமூர்த்தி, பாலகிருஷ்ணன், நாச்சியப்பன். குருமூர்த்தி, பாரதிய யுவ பரிஷத் தலைவர் ரவி, சரவணன், தண்டாபாணி, சந்திரசேகரன், செல்வி, முத்துகணேசன், லெட்சுமிகாந்தி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று வீடு, வீடாக சென்று குடிநீரின் அவசியம் குறித்தும், நீர்மிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.